31.07.2011

உள்ளத்தை திறந்து வை!

* இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம், குரல், தோற்றம் எல்லாமே மாறிவிடும். நீங்கள் மனிதகுலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள்.
* நாம் செலுத்தும் பணிவுக்கும் மரியாதைக்கும் பிரதிபலனாக, இறைவன் எதாவது ஒரு நலனைத் தரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் வரை, உண்மையான பக்தி ஏற்படாது.
* நமது உள்ளத்தை திறந்து வைத்திருந்தால், உலகிலுள்ள நல்ல நினைவுகள் அனைத்துக்கும் உரிமையுள்ளவர்கள் ஆகிவிடுவோம்.
* தன்னை அடக்கப் பழகியவன் வெளியே உள்ள எதற்கும் வசப்படமாட்டான். அவனுக்கு அதன் பின் அடிமைத்தனமும் இல்லை, அவனது மனமும் விடுதலை பெற்றுவிடுகிறது. அத்தகையவனே உலகத்தில் நன்றாக வாழும் தகுதி பெற்றவனாகிறான்.
* இறைவனுக்குப் பணி செய்ய விரும்புபவன் முதலில் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் பணி செய்ய வேண்டும். இறைவனது தொண்டர்களுக்குத் தொண்டு செய்பவர்களே அவரது உத்தமத் தொண்டர்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
- விவேகானந்தர்