31.07.2011

கஷ்டங்களை வெல்வது எப்படி?

* மேலைநாட்டு விஞ்ஞானத்தோடு இணைந்த வேதாந்தமும், பிரம்மச்சரியமும், வாழ்க்கையின் அடிப்படை லட்சியங்களாக நமக்குத் தேவைப்படுகின்றன.
* ஆசிரியரின் வாழ்க்கை முன்மாதிரியாக அமையாமல், மாணவனால் எந்தவிதக் கல்வியையும் பெற முடியாது.
* உன்னுடைய குறிக்கோளை அடைய முயற்சிக்க வேண்டும். தோல்வி கண்டு துவளக்கூடாது. தோல்வியின் மூலமே நாம் புத்திசாலிகளாகிறோம்.
* உனக்குள் இருக்கும் ஆற்றல் புறத்தில் வெளிப்படும் வகையில் நீ வளர வேண்டும். வேறு எவரும் உனக்குக் கற்பிக்கவும் முடியாது. உன்னை ஆன்மிகவாதி ஆக்கிவிடவும் முடியாது. உனது சொந்த ஆன்மாவைத் தவிர வேறு ஆசிரியர் யாருமில்லை.
* இடையறாத பயிற்சியின் மூலம் கஷ்டங்களை நாம் வெல்ல முடியும். எளிதில் பாதிக்கப்படும் வகையில் நம்மை நாமே விட்டுவைத்தாலன்றி, நமக்கு எதுவும் நேர்ந்துவிட முடியாது என்பதை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.
* தொடர்ந்து புனிதமான எண்ணங்களையே சிந்தித்தபடி நன்மையைச் செய்து கொண்டிருந்தால் தீய செயல்கள் தலைகாட்ட வழி ஏற்படாது.
- விவேகானந்தர்