05.10.2011

தடைகளைத் தகர்க்கும் வழி

* பொறாமையும், ஒன்று கூடி உழைக்க
இயலாமையும் அடிமைகளின் இயல்புகள். அவற்றை உதறியெறிய வேண்டும்.
* பரபரப்பு தேவையில்லை, சுறுசுறுப்பு
எப்போதும் உன்னிடம் இருக்கட்டும். தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை.
* இறைவன் வரம்பு கடந்த பெருமைகளை உடையவன், தூய்மையான மனத்தைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கையும் கொள்ள வேண்டும். அவனையே
எப்போதும் சார்ந்து, நன்னெறியில் நின்றால் எதனாலும் உன்னை வெல்ல முடியாது.
* கொடுப்பதற்காக கையை இறைவன் படைத்தள்ளான். பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடம் உள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் வழங்க
வேண்டும். அவ்வாறு பிறருக்கு வழங்குவதால்,
நீ பூரணமடைவதுடன் தெய்வமாகவும் மாற முடியும்.
* தெளிந்த உண்மையும், கருத்துத் தூய்மையும்
வெற்றியளிப்பது உறுதி, இவ்விரண்டையும்
படைக்கலனாகக் கொள்ளும் எவரும் எத்தடையையும் எதிர்த்து வெற்றி பெறுவதும் உறுதி.
- விவேகானந்தர்