05.01.2013

உலகத்துக்காக தியாகம் செய்!

* நல்லவர்கள் மற்றவர்களுடைய நன்மைக்காக மட்டுமே வாழ்கிறார்கள்.
* ஒருவருக்கொருவர் நன்மை செய்வதன் மூலமாகத் தான், நற்பலன்களை அடைய முடியும்.
* மற்றவர்களுக்கு முக்தியை வாங்கிக் கொடுப்பதற்காக நீ நரகத்திற்கே செல்லவும் தயாராக இருக்கவேண்டும். மரணம் ஒருநாள் உறுதி என்னும்போது நல்ல செயலுக்காக உயிரை விடுவது மேலானது.
* பெரியவர்கள் பலர் செய்த தியாகத்தின் பயனையே இன்று மனிதகுலம் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் முழுவதிலும் காணமுடியும்.
* உன் சொந்த முக்திக்காக நீ உலகத்தைத் துறந்து விட விரும்பினால் அது ஒன்றும் பாராட்டத்தக்கது அல்ல. ஆனால், உலக நன்மைக்காக உன்னை நீயே தியாகம் செய்ய முடியுமானால் கடவுளாகி விடுவாய்.
* உலகம் கோழைகளுக்காக ஏற்பட்டதல்ல. இங்கிருந்து தப்பி ஓட முயற்சிக்காதே. வெற்றி, தோல்வி என்று கவனித்துக் கொண்டிருக்காதே. உடனடியாக, தியாக உள்ளத்துடன் சேவையில் ஈடுபடு.
- விவேகானந்தர்