05.01.2013

போராடு! வெற்றி பெறு!

* வாழ்வில் நல்ல செயல்களைச் செய்யுங்கள். யாரையும் எதற்காகவும் துன்புறுத்தாதீர்கள்.
* எந்தச் செயலைச் செய்தாலும் அதில் நேர்மையைப் பின்பற்றுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்கும்.
* உலகத்தை வெல்வதைக் காட்டிலும், தன்னை வெல்லுவதே மேலான வெற்றி.
* அறியாமை, ஆசை, பொறாமை என பல தீய குணங்களுக்கு மனிதன் அடிமைப்பட்டிருக்கிறான். இதை எதிர்த்து போராடினால் வெற்றி கிடைக்கும்.
* அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமல் இருப்பதே சிறந்த வாழ்வாகும். ஆசை உன்னை சோதனைக்குள்ளாக்கும்.
* வாழ்க்கை தனக்கு மட்டுமல்லாது, தான் வாழும் சமூகம், உலகம் என்று அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
* வாழ்வில் துன்ப அனுபவத்தைத் தவிர்க்க முடியாது. அதுவும் வாழ்வின் இயல்பு என்று எடுத்துக் கொள்ளப் பழக வேண்டும்.
- புத்தர்