05.01.2013

மனதைக் கையாள பயிற்சி

* இளமையும், வலிமையும், வளமையும், அறிவுக் கூர்மையும் உடையவர்களே இறைவனை அடையக் கூடியவர்கள்.
* நீங்கள் கடவுளின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமும், பூரணத்துவமும் பெற்றவர்கள்.
* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை. அத்துடன் இவை அனைத்திற்கும் மேலாக அன்பு இருந்தாக வேண்டும்.
* நீ வலிமை உள்ளவனாக இருந்தால், நீ ஒருவனே உலகிலுள்ள அத்தனை பேருக்கும் சமமானவனாவாய்.
* அன்றைய தினம் மலர்ந்ததும், பிறரால் தொடப்படாததும், நுகரப்படாததுமான புத்தம் புதிய மலர்களே இறைவனின் பாதகமலங்களில் இடுதற்குரிய தகுதி பெற்றவை, இறைவனும் அவற்றையே விரும்பிட ஏற்கிறான்.
* சிந்தனையின் ஆற்றல் தொண்ணூறு சதம் சாதாரண மனிதனால் வீணாக்கப்படுகிறது. எனவே அவன் தவறுகளைச் செய்து கொண்டே இருக்கிறான். சரியான பயிற்சியைப் பெற்றவனோ தவறு செய்வதில்லை.
- விவேகானந்தர்