25.08.2013

நல்ல குணத்தை வளர்ப்போம்

http://www.jesusinvites.com/images/201107140906PM.gif
* மனிதனின் வாழ்நாட்கள் பற்களுக்கு ஒப்பானவை. வயலில் உள்ள பூவைப் போல அவன் செழிக்கிறான். காற்று அதன் மீது வீசியதும் பூ உதிர்ந்து விடுகிறது. அது இருந்த இடத்தை இனி அது அறியாது.
* சகலவிதமான மனக்கசப்பு, கோபதாபம், குரோதம், கூக்குரல், ஏச்சுபேச்சு ஆகிய துர்க்குணங்களை விட்டொழியுங்கள்.
* விருந்து செய்யும்போது ஏழைகளையும், ஊனமுற்றவர்களையும் கூப்பிடுவாயாக.
* விருந்து நடத்தும்போது நண்பர்களை, செல்வந்தர்களான அண்டை அயலாரை அழைக்கவேண்டாம். மறுதரம் அவர்களும் உன்னை அழைப்பார்கள். அப்போது அது உனக்கு பிரதிபலனாகி விடும்.
* உங்கள் வாழ்க்கை என்பது என்ன? சற்று நேரம் தோன்றி பிறகு மறைந்து போகும் ஒரு புகை. நம்மில் எவரும் தனக்காக வாழ்வதில்லை. தனக்காக சாவதும் இல்லை.
* ஒருவருக்கொருவர் கருணையோடும் வாஞ்சைஉள்ளத்தோடும் ஒருவரையொருவர் பொறுத்து மன்னித்து நடவுங்கள்.
- பைபிள் பொன்மொழிகள்