25.08.2013

தந்தை சொல் கேள்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9WndN8NYg20L07MQ1XNsLdig4_kWz_h1EN-_9bGGB_EHqgur0cLoqRXsGmPuN-AMuVzgKCJrF9B3IHH756xlf1I52TyJN3km1ZVVfJbzS30Tg4RDke8-nWU9-iCiHXR92-66EC2dPEY/s400/bible-and-candle.jpg
* உன் கண்கள் நேராகவே பார்க்கட்டும். உன் கண் இமைகள் முன்னோக்கட்டும்.
* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்தபடியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும் சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள்.
* எந்த ராஜாவும் தன் படைபல மிகுதியால் இரட்சிக்கப்பட மாட்டான். எந்த பலமான மனிதனும் தன் பலத்தின் மிகுதியினால் தப்பி விட மாட்டான்.
* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகி விடும்.
* பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்து விடாதே.
* எருது, வெள்ளாடு இவைகளின் ரத்தம் பாவங்களை நீக்கி விடுவது இல்லை.
* அருமையான தைலத்தை விட நல்லபெயர் சிறந்தது.
* எல்லோருமே உங்களைப் புகழ்ந்து பேசினால் உங்களுக்குக் கேடு.
* தந்தையின் புத்திமதியைக் கேள். தாயின் நியதியைப் புறக்கணிக்காதே
- பைபிள் பொன்மொழிகள்