21.09.2013

அன்பால் ஒன்றுபடுங்கள்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE9WndN8NYg20L07MQ1XNsLdig4_kWz_h1EN-_9bGGB_EHqgur0cLoqRXsGmPuN-AMuVzgKCJrF9B3IHH756xlf1I52TyJN3km1ZVVfJbzS30Tg4RDke8-nWU9-iCiHXR92-66EC2dPEY/s400/bible-and-candle.jpg
* கடவுளின் ஜீவன் எங்கிருக்கிறதோ அங்கு சுதந்திரமுண்டு.
* வேஷதாரியே, முதலில் உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை எடுத்தெறி. பிறகு, உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்தெறியத் தெளிவாய்ப் பார்க்கலாம்.
* சிறைக்கு வழி நடத்துபவன் சிறைக்குள்ளே போவான். வாளாலே கொல்லுகிறவன் வாளாலே கொல்லப்பட வேண்டும்.
* சகோதரரே, நீங்கள் சுதந்திரத்துக்கு அழைக்கப்பட்டுஇருக்கிறீர்கள். சுதந்திரத்தை உங்கள் சரீர இச்சைகளுக்குரிய ஒரு சந்தர்ப்பமாக உபயோகப்படுத்த வேண்டாம். ஆனால், அன்பினால் ஒருவருக்கொருவர் பணிபுரியப் பயன்படுத்துங்கள்.
* எதைச் சாப்பிடுவோம், எதைக் குடிப்போம், எதை உடுத்திக் கொள்வோம் என்று சிந்திக்க வேண்டாம். ஏனெனில் இவைகளையெல்லாம் அறிவிலிகளே தேடியலைகிறார்கள்.
* அக்கிரமக்காரர் எதிர்பார்ப்பது அழிந்தே போகும். நேர்மையானவனோ இடுக்கண்ணிலிருந்து விடுவிக்கப்படுவான்.
- பைபிள் பொன்மொழிகள்